கரு ஹருச்சோது - மந்திரத் தொகுப்பு
படுகர் பாரம்பரியத்தின் அரிய வாய்மொழி மரபுச் செல்வமாக, தலைமுறை தலைமுறையாய் பாதுகாக்கப்பட்டு வரும் கருஹருச்சோது மந்திரங்கள், பெரும்பாலும் ஈமச் சடங்குகளில் ஓதப்படும் மந்திரங்களாகவே கருதப்படுகின்றன. ஆனால், அவை இறந்தவர்களுக்காக மட்டுமே கூறப்படும் மந்திரங்கள் அல்ல. வாழும் மனிதர்களுக்கான ஆழமான வாழ்க்கைப் பாடங்களையும் அறநெறிகளையும் எடுத்துரைக்கும் அரிய மரபாகும். இந்த மந்திரங்களில் இடம்பெற்றுள்ள பல கருத்துகள், நமது வேதங்கள், உபநிடதங்கள், கருட புராணம், தேவாரம், திருவாசகம், திருக்குறள், ஆத்திச்சூடி, தர்மசாஸ்திரங்கள் உள்ளிட்ட இந்திய மரபு இலக்கியங்களோடு ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளன.
அவற்றின் மூலம் நமது மூதாதையர்களின் ஆன்மீகச் சிந்தனையும், பிரபஞ்சம் மற்றும் வாழ்வியல் குறித்த அவர்களின் ஆழமான புரிதலும் வெளிப்படுகின்றன. இந்தப் பெருமைக்குரிய மரபை வருங்காலத் தலைமுறைகள் அறிந்துகொள்ளும் வகையில், “கரு ஹருச்சோது – படுகர்களின் கீதை” என்ற விரிவான நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.
