
சிவன் வழியில் நடந்து, சைதன்ய நிலையை அடைய
Free E-books on Shaivism, Spirituality and Astrology
சிவனே வழி
சிவனே வழி Shivatheway.com என்னும் இந்த இணையதளத்தின் வாயிலாக பரம்பொருள் சிவனை அறிந்து கொள்ள முயற்சிக்கிறோம். ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் யார், அவர் எப்படி மானிட வர்க்கத்தை வழிநடத்துகிறார், அவர் இல்லாமல் அணுவும் அசையாது என்பது எவ்வாறு கோடிக்கணக்கான பக்தர்கள் வாழ்வில் உணரப்படுகிறது என்பதனை நூல்கள் மூலம் விளக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளமே “சிவனே வழி.”
வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு அசைவுகளும் சிவனின் எண்ணப்படியே நடக்கின்றன என்பதனை முழுமையாக புரியும் பொழுது சரணாகதி தத்துவம் நம்மில் மேலோங்கும். அப்படிப்பட்ட சிவனை புரிந்து கொள்வதற்காக இந்த இணையதளம் மூலம் பல்வேறு புத்தகங்களை வெளியிடுகின்றோம்.
சைவ சித்தாந்தம் வளர வேண்டும் என்பதற்காக இந்த நூல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய PDF வடிவத்தில் அளிக்கிறோம். சிவபெருமானின் அவதாரங்கள், சமத்துவ சொல்லும் சிவ தத்துவம், ஜோதிர்லிங்க ஸ்தலங்கள், தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள், நாயன்மார்கள் தரிசனம், எத்தனை நாமங்கள் எத்தனை பரிமாணங்கள் என்பது போன்ற சிவனை உணரும் நூல்களை இந்த இணையதளம் மூலம் வெளியிடுவதன் மூலம் சிவ பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். மேலும் சைவத்தை உணர
விரும்புபவர்களுக்கும் இந்த பதிப்புகள் உபயோகமாக இருக்கும் என்பது நிதர்சனம். சிவனைப் போற்றும் இது போன்ற நூல்கள் வரும் காலத்திலும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த இணைய தளத்தில் இரண்டாவது பகுதியாக மற்ற ஆன்மீக நூல்களும் வெளியிடப்படுகின்றன. உதாரணமாக சக்தி பீடங்கள், விதவிதமான விநாயகர், அறிவார்ந்த சிந்தனைகள் போன்ற நூல்களும், வரும் காலங்களில் மற்ற ஆன்மீக நூல்களும் பிரசுரிக்கப்படும்.
இணையதளத்தில் மூன்றாவது பகுதியாக "சோதிட முன்னோடி" என்ற தலைப்பில், ஜோதிடத்தில் கேட்கப்படும் அடிப்படை கேள்விகளை மையமாகக் கொண்டு மக்களுக்கு உதவும் ஜோதிட நூல்களும் வெளியிடப்படுகின்றன. கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என அனைத்தையும் அறிந்தவர் சிவபெருமான் என்ற ஆணித்தரமான நம்பிக்கையுடன் ஜோதிட நூல்கள் சோமேஸ்வரன் ஆகிய சிவனை முன்னிறுத்தி " சோமு" என்ற பெயரில் இலவசமாக வெளியிடப்படுகின்றன. இந்த இலவச நூல்கள் காலத்தின் தாக்கத்தை உணர்ந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம்! வெளியீடுகளில் நிறை இருந்தால் அதற்கு காரணம் ஆதி சிவன்; குறை இருந்தால் நம் வாழ்வை ஆதி சிவன் இன்னும் செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வுடன் இந்த நூல்களை சிவன் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்!
ஓம் நமசிவாய!
ஆசிரியர்
முனைவர் எம். என். ஜி. மணி, நிலகிரி மாவட்டம் முக்கிமலைவில் பிறந்தவர், உள்ளூர் பள்ளிகளில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வியை முடித்த பிறகு, கோயம்புத்தூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் உயர் கல்வியை தொடர்ந்தார். அங்கு அவர் கணிதம் மற்றும் கல்வியில் முதுகலை பட்டங்கள் பெற்றார், மேலும் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருந்து இரண்டு முனைவர் பட்டங்கள் பெற்றார். 25வது வயதில், அவர் தூய அன்னை சாரதாதேவியின் நேரடி சீடரான ஸ்வாமி விரேஷ்வரானந்தஜி மகாராஜிடம் மந்திர தீட்சை பெற்றார். 1980 முதல், அவர் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் ஈடுபட்டு, அதன் கல்வியியல் கல்லூரியின் முதல்வராகவும், விவேகானந்த பல்கலைக்கழகத்தின் முதல் டீனாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது வித்யாலயா நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார். அவர் பார்வையற்றோருக்கான சர்வதேச கல்விக் கழகத்தின் (ICEVI) முதல் CEO ஆகவும் இருந்தார்.
டாக்டர் மணி 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். மற்றும் ஆன்மிகம், கல்வி மற்றும் ஜோதிடம் ஆகியவற்றில் 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு உடைய அவர் மற்றும் அவரது மனைவி, முனைவர் சாரதா இருவரும் 267 தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கு புனித யாத்திரை சென்றுள்ளனர். சைவ தத்துவங்களின் எழுச்சிக்காக வெளியிடப்படுவது இந்த நூல் தொகுப்புகள்.


























